‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ தெலுங்குப் படம் இன்று (மே 31) திரைக்கு வருகிறது. அந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர். மேடையில் நின்று கொண்டிருந்த அஞ்சலியை நோக்கி பாலகிருஷ்ணா வேகமாகச் சென்றார்.
திடீரென்று அவர் அஞ்சலியின் தோளைப் பிடித்து பின்னோக்கித் தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி இரண்டு அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை. இதை அருகில் நின்று பார்த்த மற்றொரு நடிகை அதிர்ச்சியடைந்தார்.
பாலகிருஷ்ணா எதற்காக அஞ்சலியைத் தள்ளினார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த காணொளியைப் பார்க்கும்போது பாலகிருஷ்ணா தள்ளினாலும்கூட அஞ்சலி சிரிக்கிறார்.
இருப்பினும், பொதுமேடையில் நடிகை ஒருவரின் மேலே கைவைத்து தள்ளிவிடுவது அநாகரிகமான செயல் என பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். மொதுமேடைகளில் ரசிகர்களை அதட்டுவது, புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கோபப்படுவதுடன் சில நேரங்களில் கைகளைக்கூட அடிக்க ஓங்கியிருக்கிறார்.

