‘ஏகே’ என அழைக்கப்படும் நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
அதற்காக அவர் அங்கேயே தங்கி தனது இருசக்கர வாகனத்திலேயே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று வருகிறார். மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்குப் படமான ‘விஷ்வாம்பரா’ படப்பிடிப்பும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே நடந்து வருகிறது.
விஷ்வாம்பரா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குத் திடீரென சென்ற அஜித் மெகா ஸ்டாருடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார். “அஜித்தின் முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டேன். அந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.
“அஜித் உச்சநட்சத்திர அந்தஸ்தை அடைந்தாலும், மாறாத அன்புடன் இருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது,” என நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைரத்தளப் பக்கத்தில் அஜித்துடன் நடந்த சந்திப்பு குறித்து பதிவிட்டார்.

