திரைச்செய்தி

2 mins read
8c9a5d59-fdab-4994-9339-54e1e2409bbe
திரிஷா, நயன்தாரா. - படம்: தமிழக ஊடகம்

நயன்தாரா இல்லனா திரிஷா

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்தார் நயன்தாரா. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் பாலாஜி. இந்த முறை மூக்குத்தி அம்மனாக நயன்தாராவுக்குப் பதிலாக திரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகி ஆகிவிட்டார் திரிஷா.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பது ஆச்சரியம் இல்லை என்கிறார் பாலாஜி.

தற்போது திரிஷா தன் திறையில் உச்சத்தில் இருப்பதால் அவரை பாலாஜி அணுகியிருப்பார் என பேசப்படுகிறது. திரிஷாவை மூக்குத்தி அம்மனாக பார்க்க ரசிகர்கள் ஏற்கெனவே தயாராகி விட்டனர் என்கின்றது தமிழக ஊடகம்.

திருமணத்திற்கு பின் கவலைப்பட்டேன்: மஞ்சிமா

‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்த கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் கல்யாணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூகத் தளங்களில் பரப்பப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கு நெடுநாட்களுக்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ளார் மஞ்சிமா. “எல்லாமே ஜோடிக்கப்பட்ட பொய். இந்த வதந்திகள் எல்லாம் எங்கள் குடும்பத்தைக் காயப்படுத்தியது மட்டும் உண்மை. நான் கெளதமுக்கு ஏற்ற ஜோடி இல்லை என்பதை போன்ற விமர்சங்களைப் பார்க்கும் போது வலிக்கும். அந்த நேரத்தில் தோல்வி அடைந்ததாக உணர்ந்தேன்,” என்றார் மஞ்சிமா.

“நான் இப்போதெல்லாம் மிகவும் கவனமாகவே பேசுகிறேன். ஏனென்றால் நாம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பேசவில்லை என்றால், நம்மை அதை வைத்தே மதிப்பிடுவார்கள்,” என மனம் திறந்து பேசியுள்ளார் மஞ்சிமா மோகன்.

அஞ்சலியைத் தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா

‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ தெலுங்குப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர். மேடையில் நின்று கொண்டிருந்த அஞ்சலியின் தோளைப் பிடித்து பின்னோக்கித் தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி இரண்டு அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.பாலகிருஷ்ணா எதற்காக அஞ்சலியைத் தள்ளினார் என்பது தெரியவில்லை. இருப்பினும், பொதுமேடையில் நடிகை ஒருவரின் மேலே கைவைத்து தள்ளிவிடுவது அநாகரிகமான செயல் என பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மஞ்சிமா மோகன்.
மஞ்சிமா மோகன். - படம்: ஊடகம்
தள்ளிவிட்ட பின்னர் அஞ்சலியும் மற்றவர்களும் சிரித்தனர்.
தள்ளிவிட்ட பின்னர் அஞ்சலியும் மற்றவர்களும் சிரித்தனர். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்