காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா

1 mins read
e2dc8685-1520-459c-aa77-24717cbd9b30
நிவேதா பெத்துராஜ். - படம்: ஊடகம்

நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் கொண்ட காணொளி சினிமா ரசிகர்களால் பரவலாகப் பகிரப்படுகிறது.

அண்மையில் காரில் சென்றுகொண்டிருந்த அவரை திடீரென காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் காருக்குள் சோதனை நடத்திய அவர்கள், காரின் பின்பகுதியையும் சோதனையிட வேண்டும் என்றனர்.

அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த நிவேதா, “காருக்குள் ஒன்றும் இல்லை. அனைத்து ஆவணங்களும் வைத்திருக்கிறேன்.

“இது எனது மரியாதையுடன் தொடர்புள்ள விஷயம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்,” என்று நிவேதா கூறியுள்ளார்.

ஆனால் காவல்துறையினரோ, சோதனையிடுவது தங்கள் கடமை என்று கூறிவிட்டு பணியைத் தொடர்ந்தனர்.

அப்போது யாரோ ஒருவர், நிவேதா வாக்குவாதம் செய்வதை காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்