‘திமிரு’, ‘வெயில்’, ‘பள்ளிக்கூடம்’, ‘சலார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டி தற்போது இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத்தொடர் ‘தலைமைச் செயலகம்’.
இதில் கொற்றவை என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்நிலையில் இணையத் தொடரில் ஸ்ரேயாவை நடிக்கவிடாமல் பலர் இடையூறுகளைச் செய்ததாக வசந்தபாலன் கூறியுள்ளார்.
“ஆயிரம் சக்திகள் இடையூறு செய்தபோதும் வசந்தபாலனுக்காக நடிக்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தத் தொடரில் நடித்தார் ஸ்ரேயா. ‘தலைமைச்செயலகம்’ என்ற தொடரின் வெற்றியைவிட எனக்கு முதல் மகிழ்ச்சி என்பது கொற்றவை கதாபாத்திரத்தின் வெற்றிதான். என் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இதில் நடித்துள்ளார் ஸ்ரேயா. அவரது திறமையான நடிப்பைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்,” என்று வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.’

