சரியான பாதையில் செல்கிறேன்: சாய் பல்லவி

சரியான பாதையில் செல்கிறேன்: சாய் பல்லவி

1 mins read
fcaa8919-1b97-4fa5-9b4f-a39d7a32ae83
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் தாம் நடிக்க மறுத்ததாக வெளியான தகவலை நடிகை சாய் பல்லவி மறுத்துள்ளார்.

இது வெறும் வதந்தி என்றும் வதந்திகளுக்கு தாம் ஒரு போதும் பதில் அளிப்பதில்லை என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“வதந்திகளுக்கு விளக்கம் அளித்தால் அதற்கு மேலும் பலம் சேர்த்தது போலாகிவிடும். இந்தக் காரணத்தினால் எனது பணிகள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக அமைதி காப்பதுதான் நல்லது. விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நிராகரிக்க மாட்டேன்,” என்கிறார் சாய் பல்லவி.

தாம் நல்ல படங்களாக தேர்வு செய்து நடிப்பதை ரசிகர்கள் பாராட்டுவதாகவும் தற்போது செல்லும் பாதையில் இருந்து விலகிச் செல்ல மனமில்லை என்றும் சாய் பல்லவி தமது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்