அஜித்தைக் குற்றம்சாட்டும் பிரபல தயாரிப்பாளர்

அஜித்தைக் குற்றம்சாட்டும் பிரபல தயாரிப்பாளர்

1 mins read
fe145a45-71eb-4992-b4bc-86f47303dc25
அஜித். - படம்: ஊடகம்

பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், ஒரு திரைப்படத்தில் நடிக்க, அஜித் தம்மிடம் பெற்ற முன்பணத்தைத் திருப்பித் தரவில்லை எனக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அஜித்தைவிட பல மடங்கு சாதித்தவர்கள் திரையுலகில் உள்ளனர் என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஜித் தாம் மட்டுமே திரையுலகில் யாருடைய உதவியும் இல்லாமல் சாதித்துக்காட்டியதாக சொல்கிறார். இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இவரைவிட அதிகம் சாதித்தவர்கள் உள்ளனர். ஆனால், அஜித் மட்டுமே சுய தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.

“அவர் பண்பான மனிதர் என்றால், என்னிடம் பெற்ற தொகையைத் திருப்பித் தர வேண்டும். அவருக்குப் பணம் கொடுத்ததை நான் எப்போதோ நிரூபித்துவிட்டேன். அதேபோல் தன் பக்கம் நியாயம் இருப்பதாக அவர் கருதினால், அவரும் ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும். நான் வாய் மூடிக்கொள்கிறேன்,” என்று மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்