புற்றுநோய் பாதிப்பால் அண்மையில் காலமான இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணி பாடிய கடைசிப்பாடல் வெளியாகி உள்ளது.
அவர் மரணம் அடைவதற்கு முன்பு, ‘ஆர்யமாலா’ என்ற படத்தில் ‘அத்திப்பூவப் போல’ என்ற பாடலைப் பாடியிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பாடலை பவதாரிணி பாடும் காணொளியுடன் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஆதிரை எழுதிய இப்பாடலுக்கு செல்வநம்பி இசையமைத்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியுள்ள பவதாரிணி, ‘பாரதி’ படத்தில் இடம்பெற்றுள்ள, ‘மயில் போல’ எனத் தொடங்கும் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர்.