ஒரு காலத்தில் சின்னத் திரையில் நடிகராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் விஜய் ஆதிராஜ்.
பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்த இவர், கடந்த 2013ஆம் ஆண்டு ‘புத்தகம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யாதான் இப்படத்தின் நாயகன்.
ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் விஜய் ஆதிராஜ்.
‘நொடிக்கு நொடி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் அஸ்வின் குமார், ஷ்யாம், நரேன் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
பரபரப்பான களத்தில், ஜனரஞ்ஜகமான, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமாக இது உருவாகிறதாம்.
ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஆண்டு இறுதிக்குள் படம் வெளியீடு காணும் என்றும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

