‘காந்தாரி’ தோற்றத்தில் அச்சமூட்டும் ஹன்சிகா

‘காந்தாரி’ தோற்றத்தில் அச்சமூட்டும் ஹன்சிகா

1 mins read
ff554ea5-61b7-43f7-be91-c2747a6819fe
‘காந்தாரி’ படத்தில் ஹன்சிகா. - படம்: ஊடகம்

நடிகை ஹன்சிகா தற்போது ‘காந்தாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கும் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.

’ஜெயம் கொண்டான்’, ‘தள்ளி போகாதே’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கும் இப்புதிய படத்தில் ஹன்சிகா தனி நாயகியாக நடித்துள்ளார்.

இதில் பழங்கால பொருள்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார் ஹன்சிகா.

“பல ஆண்டுகளுக்கு முன்பு எதிரிகளால் கொல்லப்படும் காந்தாரி என்ற பெண் குறித்து ஹன்சிகா ஆராய்ச்சியில் ஈடுபடுவார். அப்போது காந்தாரி திடீரென உயிர்த்தெழுந்து, ஹன்சிகா மூலம் எதிரிகளைப் பழிவாங்குவதுதான் கதை. இதில் ஹன்சிகா சில சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் கண்ணன்.

காந்தாரி தோற்றத்தில் ஹன்சிகா காட்சியளிக்கும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்