ஒரே பாடலை ஆறு மொழிகளில் பாடி அசத்திய ஷ்ரேயா

ஒரே பாடலை ஆறு மொழிகளில் பாடி அசத்திய ஷ்ரேயா

1 mins read
4f80ed9e-2db6-4a46-9d4e-e9fbd65cad8d
ஷ்ரேயா கோஷல். - படம்: ஊடகம்

இந்தி பாடகி ஷ்ரேயா கோஷல் ஒரே பாடலை ஆறு மொழிகளில் பாடி அசத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரேயா, அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார்.

மேலும் ஆங்கிலம், பிரெஞ்ச் மொழியிலும் பாடியுள்ள பெருமைக்குரிய அவர், ‘புஷ்பா’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சூசெகி’ என்ற பாடலை இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி மொழிகளிலும் பாடியுள்ளார்.

ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் பாடல் வரிகளைத் தந்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை நான்கு பாடகிகள் பாடினர். ஆனால் அதேபோன்ற ஒரு பாடலை ஆறு மொழிகளில் ஷ்ரேயா கோஷல் மட்டுமே தனியாக பாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்