கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா இணைந்து நடித்துள்ள ’பிடிசார்’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, இது வெற்றிப்படம் என்று சொல்வதில் எந்தவிதத் தயக்கமும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படத்தை அனைவரும் நேசிக்கும்படியாக உருவாக்கிய படக்குழுவுக்கு மிக்க நன்றி. உங்களுடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை நல்ல பலன்களை கொடுத்துள்ளன,” என்று படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

