நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் மூன்று நாள்களில் ரூ.17 கோடி வசூல் கண்டுள்ளது.
துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘விடுதலை’ படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் படத்துக்காக செலவிட்ட தொகையைவிட அதிக வசூல் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து கதாநாயகனாக சூரி, தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.