உண்மையைப் பேசுவோர் சிரமப்படுகிறார்கள்: சிம்பு

உண்மையைப் பேசுவோர் சிரமப்படுகிறார்கள்: சிம்பு

படம்: ஊடகம்

04 Jun 2024 - 6:52 pm

1 mins read

உண்மையைப் பேசுவதால் தமக்கு அதிக பிரச்சினைகள் ஏற்படுவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தமக்கு திரைப்படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகில் உண்மையைப் பேசுபவர்களே அதிகம் சிரமப்படுகிறார்கள். இதுதான் உண்மையான சூழல்.

“நான் நிறைய உண்மையை பேசி உள்ளேன். எனக்கு திரைப்படங்களில் நடிக்க தடைவிதிக்கப்பட்டதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். யாரும் எனக்கு தடை விதிக்கவில்லை.

“சிறிய பிரச்சினை ஒன்று இருந்தது. அதுவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது,” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்திரைப்படம்சிம்பு

தொடர்புடைய செய்திகள்