இசையமைப்பாளர் இளையராஜா ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணைத்தூதர் ஓலெக், இளையராஜாவை அவரது பிறந்தநாள் அன்று சந்தித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் மிகச் சிறந்த நண்பர்களில் இளையராஜாவும் ஒருவர் என்றார்.
“ரஷ்யாவின் உள்நாட்டு இசைக்கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா முன்வந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். வரும் ஜூலை மாதம் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று துணைத்தூதர் மேலும் தெரிவித்தார்.

