ஊதியத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

ஊதியத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

1 mins read
105a69d8-df17-46db-9b7e-39b73932dcf6
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை ரூ.20 கோடியாக அதிகரித்துவிட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஒரு தயாரிப்பாளர் ரூ.10 கோடி மட்டுமே சம்பளம் தர முடியும் என்று கூறியபோது அவரது படத்தில் நடிக்க விருப்பம் இல்லை எனத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, ‘சூப்பர் டிலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘தங்கத்தமிழன்’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’மெஃரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான் என்று ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஆனால் உயர்த்திய ஊதியத்தை குறைக்க இயலாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறாராம் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்