காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா சமூக ஊடகத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
“என்றும் என் நினைவில் இருக்கும் பாலு… மிஸ் யூ” எனப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலாவும் இளையராஜாவும் நெருக்கமான நண்பர்கள். அவரது மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் தேம்பி அழுது துக்கத்தைக் குறைத்துக் கொண்ட இளையராஜா, தன் நண்பருக்காக திருவண்ணாமலையில் மோட்ச விளக்கு ஏற்றி வைத்தது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி தனது நண்பரை நினைத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் இளையராஜா.

