தனது சகோதரருக்கு அவர் விரும்பிய பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக நடிகர் பிரேம்ஜியின் சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தங்களுடைய குடும்பத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு மங்கல நிகழ்வு நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிய அளவில் குடும்பத்தினர் முன்னிலையில் பிரேம்ஜியின் திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழை பொது வெளியில் பகிர்ந்து விட்டார். மணமகள் ஊடகத்துறையைச் சார்ந்தவர் என்று கூறப்படுவது உண்மையல்ல.
“பிரேம்ஜியின் திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை வெளியிடுவோம். திருமண வரவேற்பில் சந்திப்போம்,” என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.