நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்பதாகச் சொல்கிறார் தமன்னா.
எனினும், அந்தப் போட்டி குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தாலே ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது சிலரது வழக்கம். இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள்.
“நமக்குள் இருக்கும் போட்டியால் திரையுலகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாமாக இருக்க வேண்டும்.
“இப்படித்தான் ‘அரண்மனை 4’ படத்தில் நானும் ராஷி கன்னாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம்,” என்று தமன்னா மேலும் கூறியுள்ளார்.