மேஜிக் கலைஞராக மாறும் யோகி பாபு

1 mins read
1f41f349-b3c8-48c4-a80d-39ed180a9f17
யோகி பாபு. - படம்: ஊடகம்

நடிகர் யோகி பாபுவுக்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றுள் மாறுபட்ட கதைக்களங்களை அவர் தேர்வு செய்கிறார்.

சில படங்களில் கதை நாயகனாக நடித்துள்ள அவர், புதுப்படம் ஒன்றில் மேஜிக் கலைஞராக நடிக்க உள்ளார். ‘ஜோரா கையதட்டுங்க’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை வினீஸ் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்துக்காக பிரபல மேஜிக் (மாயாஜால) கலைஞர் ஒருவரிடம் பல நாள்கள் பயிற்சி பெற்றுள்ளார் யோகி பாபு.

ஒரு காலத்தில் மேஜிக் துறையில் புகழ் பெற்று விளங்கிய தனது தந்தைப் போலவே வளர்ச்சி காணவேண்டும் என விரும்புகிறார் மகன். அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறார். அவையெல்லாம் மகனுக்கு கை கொடுத்ததா என்பதுதான் இந்தப்படமாம்.

குறிப்புச் சொற்கள்