பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘சார்பட்டா பரம்பரை’. மூன்றாண்டுக்கு முன்பு வெளியான இப்படத்துக்கு ரசிகர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைத்தது.
இதில் ஆர்யா நாயகனாவும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் பசுபதியும் நடித்திருந்தனர். இவர்களைத்தவிர துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆர்யா, இயக்குநர் ரஞ்சித் ஆகிய இருவரும் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இப்படத்துக்காக பெரும் தொகை தேவைப்படும் என்று தெரிய வந்ததும் இருவரும் தயாரிப்புப் பணியை கைவிட்டனர். இதனால் தாமதம் ஏற்பட்ட நிலையில், மற்றொரு தயாரிப்பு நிறுவனம் கைகொடுத்துள்ளது. இதையடுத்து பட வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

