சக நடிகைகளைப் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வரும் சமந்தா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டி வரு கிறார். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகத் தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிடுகிறார்.
இதற்காகவே ‘பிரதியுஷா சப்போர்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையையும் தொடங்கி இருக்கிறார். இதன்மூலம் தன்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து சமந்தா செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
37 வயதில் தனது இரண்டாவது நடிப்புச் சுற்றைத் தொடங்கியுள்ள சமந்தா, ஏறக்குறைய 100 கோடிக்கும் மேலான சொத்துக்குச் சொந்தக்காரராக உள்ளார்.
ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.4 கோடி வரை இவர் சம்பளம் வாங்குவதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சினிமாவில் நடிப்பதுடன் விளம்பரங்களில் நடிப்பது, வர்த்தக முதலீடுகள், பலதரப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலமும் இவரது வருமானம் கோடிகளில் புரள்கிறது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் அதிகம் வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில்தான் சமந்தா வசித்து வருகிறார். இவரது வீடு அழகியலின் இருப்பிடமாக இருப்பதாகவும் சிலாகித்துக் கூறுகின்றனர்.
பாலிவுட் பக்கமும் தனது திரைப் பயணத்தைத் தொடர இருப்பதால், மும்பையில் கடல் அலைகளை ரசிக்கும் வகையில் மூன்றறை வீட்டை ரூ.15 கோடிக்கு வாங்கியிருக்கிறார் சமந்தா.
ரூ.2.26 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், ரூ.3.30 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் என ஏராளமான கார்களையும் வைத்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவரது திரையுலகப் பயணம் எத்தனை காலத்துக்கு நிலையாக இருக்கும் என யாருக்கும் தெரியாது என்பதால், பலதரப்பட்ட வர்த்தகங்களிலும் சமந்தா முதலீடு செய்துள்ளார்.
தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமந்தா கூறுகையில், “சினிமாவில் நடிப்பதை வெறும் கவர்ச்சியாகவே பார்க்கிறார்கள். ஆனால், அது முழுவதும் உண்மையல்ல. ஒரு முன்னணி நடிகையாக இருந்தால்தான், அதன் கஷ்ட நஷ்டங்கள் புரியும். ஆம். சமந்தாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல,” என்று கூறியுள்ளார்.