பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் அண்மையில் வெளியிட்ட காணொளியில் ரஜினிகாந்த் மனிதகுலத்துக்குக் கடவுள் வழங்கியுள்ள பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் ரஜினியின் மிகப் பெரிய ரசிகர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நடிகர்கள் இருவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது புதுடெல்லியில் சந்தித்துக்கொண்டனர்.
அனுபம் கெர் பதிவிட்டுள்ள காணொளியில், இருவரையும் பாதுகாப்பு ஊழியர்கள் சூழ்ந்துள்ளதைக் காண முடிகிறது.
கேமராவை ரஜினியின் பக்கம் திருப்பி, ‘ஒப்புவமை இல்லாத திரு ரஜினிகாந்த்! ஈடு இணையற்றவர்! மனிதகுலத்துக்குக் கடவுள் வழங்கியுள்ள பரிசு’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார் அனுபம் கெர்.
அவருக்கு அருகில் நடக்கும் ரஜினி சிரித்த முகத்துடன் காணப்படுகிறார்.
இன்ஸ்டகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இக்காணொளியை 176,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
ரசிகர்கள் பலரும் அனுபமின் சொற்கள் உண்மை என்று கருத்துரைத்துள்ளனர்.

