உடல்நலம் பாதிக்கப்பட்ட சகோதரி: மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர்.ரகுமான்

உடல்நலம் பாதிக்கப்பட்ட சகோதரி: மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர்.ரகுமான்

1 mins read
bdaf202b-5253-4446-b9e6-62cb8458c7ef
தாயாருடன் ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தனது பணி நெருக்கடியின் காரணமாக உடன்பிறந்த சகோதரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை கவனித்துக் கொள்ள தம்மால் இயலவில்லை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

ஒருமுறை தாம் இசையமைக்கும் திரைப்படத்துக்கான இசைப் பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்ததாகவும் அப்போதுதான் சகோதரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சமூக ஊடகப் பதிவில் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

“சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் நான் ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தேன். என்னால் அங்கிருந்து கிளம்பமுடியாத சூழ்நிலை. அப்படத்தின் தயாரிப்பாளர் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அதனால் பட வேலைகளைத் தள்ளிப்போட முடியவில்லை.

“அன்றைய தினம் மாலை ஐந்து மணிக்குள் ஒரு பாடலை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். சகோதரி உடல் நிலை குறித்து எனது தாயார் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்து வந்தார்.

“அக்காவை நேரில் பார்க்க முடியாத தவிப்பில் இருந்த எனக்கு அதிர்ஷ்டவசமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க இயன்றது. இதற்காக கடவுளுக்கு நன்றி.

“நான் மாலையில் பணி முடித்து மருத்துவமனைக்குச் சென்றபோது அக்கா உடல்நலம் தேறியிருந்தார் என்று ஏ.ஆர்.ரகுமான் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்