நடிகர் கார்த்தியின் 30வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் தமிழ் இயக்குகிறார்.
கடந்த ஆண்டு வெளியான ‘டாணாக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை இயக்கிய தமிழ், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
மேலும், ‘அசுரன்’, ‘ஜெய்பீம்’ ஆகிய படங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. இந்நிலையில் ‘டிரீம் வாரியர்’ நிறுவனம் தயாரிக்க கார்த்தியின் 30வது படத்தை இயக்க இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கடந்த 1960களில் தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதிகளில் குண்டர் கும்பல்களின் அட்டூழியம் அதிகமாக இருந்தது. அதை பின்னணியாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் தமிழ்.

