ஜி.வி. இசையமைப்பில் நான்கு படங்கள்

ஜி.வி. இசையமைப்பில் நான்கு படங்கள்

1 mins read
c88ba14a-65b9-4d18-a762-8cd5fd5a20eb
ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

‘அமரன்’, ‘தங்கலான்’ படங்கள் குறித்த அண்மைத் தகவல்கள் சிலவற்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் புதுத் தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“அமரன்’ படத்தின் அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தயாரிப்பாளர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன். ‘லக்கி பாஸ்கர்’, ‘தங்கலான்’ பங்களின் முதல் பாடல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதை எப்போது வெளியீடு செய்வது என்பதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்.

“தனுஷ் இயக்கத்தில் வெளியாகக் காத்திருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை இளையர்களை கவரும் வகையில் இருக்கும்,” என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்