புது முகங்கள் நடிப்பில் உருவாகும் ‘லார்டு லபக்தாஸ்’

புது முகங்கள் நடிப்பில் உருவாகும் ‘லார்டு லபக்தாஸ்’

1 mins read
1188cc58-8954-4416-9dfc-70ec0bbb32fc
‘லார்டு லபக்தாஸ்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘லார்டு லபக்தாஸ்’ என்ற மாறுபட்ட தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகிறது. இதில் பெரும்பாலான கதாபாத்திரங்களில் புது முகங்கள் தான் நடித்துள்ளனர்.

குரு சோமசுந்தரம் நடித்த ‘பெல்’ என்ற படத்தை இயக்கிய வெங்கட் புவன் தான் இப்படத்தின் இயக்குநர். திவான், ராஷ்மி ஆகியோர் நாயகன், நாயகியாக அறிமுகமாக பிருத்தி இசையமைக்கிறார்.

“ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவனே துணை’ என்று கூறுவர். இதை அடிப்படையாக வைத்துதான் இப்படம் உருவாகிறது. உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தால் கடவுள் நாம் வேண்டிய அனைத்தையும் தருவார் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளோம்.

ஜூலை 5ஆம் தேதி படம் வெளியாகிறது. இதில் காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் என அம்சங்களும் இருக்கும். இதை முழுநீள பொழுதுபோக்குப் படம் என்றும் கூறலாம்.

“மேலும், இன்றைய இளையர்களுக்கு ஏற்ற படம் என்றும் உத்ரவாதத்துடன் குறிப்பிடலாம்,” என்கிறார் இயக்குநர் வெங்கட் புவன்.

குறிப்புச் சொற்கள்