அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்; ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்; ரசிகர்கள் உற்சாகம்

1 mins read
47d1c5c2-512a-434f-8d06-91f268b91d46
அஜித். - படம்: ஊடகம்

`விடா முயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித்திடம் பத்்து நாள்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மகிழ் திருமேனி தரப்பு கூறுகிறது.

எதிர்வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்றும் தேதியை மாற்ற இயலாது என்றும் இயக்குநரிடம் கூறியுள்ளதாம் தயாரிப்புத் தரப்பு.

இந்தாண்டு ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரு படங்களில் நடித்து வருகிறார் அஜித்.

இதில் ‘விடா முயற்சி’யில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார். படத்தை முடிக்க குறைந்தபட்சம் 35 நாள்களாவது படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமாம்.

இதற்காக இப்படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்குக் கிளம்புகின்றனர்.

இதற்கிடையே, தவிர ‘குட் பேட் அக்லி’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அப்படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இரு படங்களுமே குறித்த தேதியில் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

இரண்டுமே மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிறது என்பதால் தனிப்பட்ட முறையில் அஜித்தே வழக்கத்தைவிட அதிக உற்சாகமாக காணப்படுகிறாராம். இருபடங்களின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமாம்.

குறிப்புச் சொற்கள்