நடிகர் பிரதீப் மர்ம மரணம்

நடிகர் பிரதீப் மர்ம மரணம்

1 mins read
cec697ed-0557-431e-8abf-9bf77a493838
நடிகர் பிரதீப். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

‘தெகிடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், சென்னை பாலவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த இரு தினங்களாக பிரதீப்பை தொடர்புகொள்ள முடியாத நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்