கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என உறுதியாகச் சொல்கிறார் காஜல் அகர்வால்.
இதனால்தான் தனக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்த ஆறாவது மாதம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார்.
தனது ஆறு மாதக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்போது இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்கிறாராம்.
ஒன்று, படப்பிடிப்புக்கு வரும்போது, தனது ஆறு மாதக் குழந்தையையும் தன்னுடன் அழைத்துவருவது. அதனால் குழந்தை பாதுகாப்பாக இருக்க கேரவன் வசதி செய்துதர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இரண்டாவதாக, தன் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு என் அம்மாவும் வருவார். அம்மாவும் என்னுடன்தான் இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
காஜல் கூறிய இரு நிபந்தனைகளுக்கும் சரியென்று கூறி அவரை நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள்.
‘இந்தியன் 2’ திரைப்படமும் அவரது நிபந்தனைகளுடன் நடித்துக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அடுத்து, ‘சத்யபாமா’ என்ற காஜல் அகர்வாலை மையமாகக் கொண்ட படம் வெளியாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த இரண்டு படங்களும் வெளியாகி வெற்றிபெற்றால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார் காஜல் அகர்வால்.
ஆனால், திருமணமான நடிகைகளை முன்னணி நாயகன்களுடன் ஜோடியாக நடிக்கவைக்க விரும்பமாட்டார்களே என்று அவரது நிர்வாகி தரப்பில் சொல்லப்பட்டதாம்.
பாலிவுட்டில் திருமணமான தீபிகா படுகோன், ஆலியா பட், கியாரா அத்வானி என எல்லோரும் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். கவர்ச்சிக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை. அதேபோல் கவர்ச்சியில் முன்பைவிட தாராளமாக நடிக்கத் தயார் என்று சொல்லுங்கள் என்று காஜல் அகர்வால் அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம்.