இதுவரை அதிக சம்பளம் பெற்று வந்த நயன்தாரா, திரிஷாவை ஓரம்கட்டி ரூ.13 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தன்னுடைய துறுதுறு நடிப்பால் இளைஞர்களை கவர்ந்திழுத்த ராஷ்மிகாவுக்கு அண்மையில் ‘நேஷனல் கிரஷ்’ என்ற பட்டம் கிடைத்தது.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் ஜோடியாக ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளம் கேட்டாராம். அதன்பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் ரூ.13 கோடி சம்பளமாக தருவதாக தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் சம்பள விஷயத்தில் நடிகைகள் திரிஷா, நயன்தாராவை ஓரம்கட்டி இருக்கிறார் ராஷ்மிகா. திரிஷாவும், நயன்தாராவும் ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.