பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது

1 mins read
d1bb35a9-c397-43ab-b031-52a576e8bc85
இளையராஜா. - படம்: ஊடகம்

பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

அப்போது, ‘சம்பளம் கொடுத்து பாடல்களைப் பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார்,’ என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்தது. எனவே, பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.

மேலும், இசை அல்லது பாடல் வரிகளை மாற்றினால் மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇசை