நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் முன்பு அறிவித்த தேதியில் வெளியாகாது என்று கூறப்படுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-2’ படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.
நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். ‘புஷ்பா-2’ படத்தின் 2 பாடல்கள், முன்னோட்டக் காட்சி ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

