கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவான படம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. உலகம் முழுவதும் 241 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார்.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம். இப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றால், இனிமேல் நான் ஆஸ்கர் விருதுகளையே நம்ப மாட்டேன். தாமதமாக பார்த்ததற்கு படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மலையாளப் படவுலகை பெருமைப்படுத்திய சிதம்பரம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

