படத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது காலில் எலும்பு முறிந்ததால் தற்பொழுது ஓய்வு எடுத்து வருகிறார்.
இயக்குநர் மணிரத்னம் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனை வைத்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இதில் கமல்ஹாசனுடன் சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் ஜோஜு ஜார்ஜ் ஓய்விற்காக கொச்சின் திரும்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.