‘மகாராஜா’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ்

‘மகாராஜா’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ்

1 mins read
f46515db-603f-4264-9702-62b5c48270e1
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

‘மகாராஜா’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரையும் விஜய் சேதுபதியையும் பாராட்டி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

“தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். நித்திலன் விஜய் சேதுபதி சாருக்கு 50வது படமாக நல்ல கதையம்சம் உள்ள ஒரு சிறந்த படத்தைக் கொடுத்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப் படத்தில் அபாரம். மேலும் படத்தில் நடித்திருந்த அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் நட்டி நட்ராஜ் ஆகியோரின் நடிப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்,” என்று பதிவிட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் செயலாளராக இருந்து வந்த ஜெகபதி தற்போது ‘தி ரூட்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் உருவாகி வரும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக பட விளம்பரங்களைப் பார்த்துக் கொண்ட ஜெகதீஷுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை

தொடர்புடைய செய்திகள்