மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவாலயப் பணிகள் தொடங்கிவிட்டதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் 2020ஆம் ஆண்டு காலமானார் எஸ்.பி.பாலா.
அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த இடத்திலேயே நினைவாலயம் கட்டும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக சரண் கூறியுள்ளார்.
“எனது கனவுத் திட்டத்தை இன்று தொடங்கிவிட்டேன். எஸ்.பி.பி நினைவாலயம்,” என்று சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார் சரண்.
முன்னதாக, எஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட பண்ணைத் தோட்டத்துக்கு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தற்போது நினைவிடப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

