“குடும்பத்திற்காக வாழத்துடிக்கும் பெண்ணாகத்தான் நான் இருக்கிறேன்,” என்று நடிகை கியாரா அத்வானி கூறியுள்ளார்.
அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்கள் மத்தியில், கேக் வெற்றி அவர் கொண்டாடினார்.
அப்போது உணர்ச்சிப்பெருக்கில் அழுத அவரை ரசிகர்கள் சமாதானப்படுத்தினர்.
“ரசிகர்களும் இன்று என் குடும்பமாகிவிட்டனர். அதனால் என் குடும்பம் இப்போது பெரிதாகிவிட்டது.
“எனது கனவு நனவாக உதவிய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்று கியாரா அத்வானி குறிப்பிட்டார்.
தற்போது சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார் கியாரா.

