விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகிறது ‘சார்’ திரைப்படம்.
முன்னதாக, இப்படத்துக்கு ‘மா.பொ.சி’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தனர்.
‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்பதன் சுருக்கமாக இத்தலைப்பு வைக்கப்பட்டதாக இயக்குநர் போஸ் வெங்கட் கூறினார்.
இந்நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக படத்தின் தலைப்பை மாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.