தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யஷ்ஷுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா

1 mins read
34a19457-1b27-4b18-b516-b84bcb607628
நயன்தாரா, யஷ். - படம்: ஊடகம்

கன்னட நடிகர் ‘கேஜிஎஃப்’ படப் புகழ் யஷ் தற்போது தனது 19வது படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள இயக்குநர் கீது கோகன்தாஸ் இயக்கும் இப்படத்துக்கு, ‘டாக்சிக்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் யஷ்ஷுக்கு அக்காவாக நயன்தாராவும் கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடிக்கின்றனர். தற்போது இவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்படுமாம். மொத்தம் 200 நாள்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தமிழில் ரூ.10 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா, யஷ்ஷுடன் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு அதைவிட அதிகம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகக்கூடும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்