இந்த ஆண்டில் மட்டும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள மூன்று படங்கள் வெளியீடு ஆகின.
இந்நிலையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
“என்னைப் பொறுத்தவரை திரையுலகில் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த உழைப்புக்குரிய பலன்கள் எதிர்பாரா தருணங்களில் நம்மை வந்தடையும். நேர்மையாக உழைத்தால் திரைத்துறை கைவிடாது.
“எனது அனைத்து தேடல்களுமே தற்போது சினிமா துறையில்தான் நிகழ்கிறது. இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
அண்மைய சில மாதங்களில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ‘ரெபல், ‘கள்வன்’, ‘டியர்’ ஆகிய படங்கள் வெளியீடு கண்டுள்ளன.

