தமக்கு அறவே பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார் நடிகை வேதிகா.
இவரது நடிப்பில் தற்போது வெளியீடு கண்டுள்ள ‘யாக்ஷினி’ இணையத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்றும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
லாரன்ஸ் நடித்த ‘முனி’ படத்தில் வேதிகாதான் கதாநாயகி. அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், கனமான பாத்திரங்கள் ஏதும் தமக்கு அமையவில்லை என்று குறிப்பிட்டு வந்தார் வேதிகா.
இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் ‘பேட்டராப்’ படத்தில் இவர்தான் கதாநாயகி.
‘யாக்ஷினி’ இணையத்தொடரை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

