பிரபு, கார்த்திக் வாரிசுகள் இணைந்து நடிக்கும் படம்

பிரபு, கார்த்திக் வாரிசுகள் இணைந்து நடிக்கும் படம்

1 mins read
ccb61444-0e1b-41ed-a43a-b1bfecd1c6b7
கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு - படம்: ஊடகம்

’கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் அண்மையில் வெளியீடு கண்ட ‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, தனது மகனை நாயகனாக வைத்து, ’சுள்ளான் சேது’ என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

அதன் பின்னர் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் ஆகிய இருவரையும் முதன்மைக் கதாபாத்திரத்தில் வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர்கள் பிரபு, கார்த்திக் இருவரும் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது அவர்களுடைய மகன்களான விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்