’கூலி’ படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதால் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது ரஜினிகாந்த வருத்தத்தில் இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாத மத்தியில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இப்படத்தில் நடிக்க வசதியாக, ரஜினி ஏற்கெனவே நடித்து கொண்டிருந்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பையும் அவசரப்படுத்தி முடிக்க வைத்தாராம் லோகேஷ். இதுதான் ரஜினியின் கோபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
’கூலி’ திரைக்கதையை மூன்று மாதங்களுக்கு மேலாக எழுதி வருகிறார் லோகேஷ். விரைவில் திரைக்கதை முழுமையாகத் தயாராகிவிடும் என்றும் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என்றும் லோகேஷ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.