நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழ்த் திரையுலகில் தமது இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ளார்.
விஷாலுடன் ‘எனிமி’ படத்தில் நடித்த பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் இயக்குநர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியுள்ளதாக அவரே சொல்கிறார்.
“விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன் இந்நிலையில் ‘மகாராஜா’ கதையைக் கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க சம்மதித்தேன்,” என்கிறார் மம்தா.

