விரைவில் வெளியீடு காண உள்ள கார்த்தியின் இரு படங்கள்

1 mins read
88d60b33-b98b-4de7-9416-231758268851
கார்த்தி. - படம்: ஊடகம்

நடிகர் கார்த்தியும் அவரது ரசிகர்களும் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளனர்.

காரணம், அவர் நடித்த இரு படங்கள் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

கடந்த சில மாதங்களாக ‘மெய்யழகன்’, ‘வா வாத்தியார்’ ஆகிய இரு படங்களில் கவனம் செலுத்தி வந்தார் கார்த்தி.

அவற்றுள் ‘மெய்யழகன்’ படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம். அதற்கு முன்பே தொடங்கப்பட்ட ‘வா வாத்தியார்’ பட வேலைகள் இன்னும் முழுமை அடையவில்லை.

எனவே, ‘மெய்யழகன்’ படம் முதலில் வெளியாகும் என்றும் இதற்கான அறிவிப்பு படத் தயாரிப்பாளரான சூர்யா மூலம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்