விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’ படம் மறுவெளியீடு காண உள்ளது. இதில் விஜய் ரசிகர்களைவிட அதிக உற்சாகத்தில் உள்ளார் நடிகர் சத்யன்.
ஏனெனில், அந்தப் படத்தில் இவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’, ‘அழகிய தமிழ்மகன்’, ’நண்பன்’, ’துப்பாக்கி’, ’புலி’, ’மெர்சல்’ என்று 6 படங்களில் நடித்துள்ளார். எனினும், ’நண்பன்’ படத்தில் வரும் கதாபாத்திரம்தான் அதிகம் பேசப்பட்டது. அதில் நான்தான் முக்கியமான வில்லன் மாதிரி.
ஆறு படங்களிலும் என் நடிப்பு மிகவும் பிடித்திருப்பதாக என்னிடம் கூறினார்.
’புலி’ படத்தின் படப்பிடிப்பின்போது மூத்த நடிகர்கள் தம்பி ராமையா, பிரபு ஆகியோருடன் நான் பங்கேற்ற காட்சியைப் படமாக்கியபோது, ‘தம்பி ராமையா நல்லா நடிப்பார். எனவே அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிக்கணும்’ என்றார் பிரபு.
“உடனே குறுக்கிட்ட விஜய், ‘சார்.. நண்பன் படத்தில் சத்யனின் நடிப்பை பார்த்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டீர்கள். இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டுமா’ என்று எனக்கு ஆதரவாகப் பேசினார். அதுதான் விஜய்,” என்று சத்யன் கூறியுள்ளார்.

