தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மகாராஜா’வில் நடிக்க மிகக் குறைந்த சம்பளம் பெற்ற விஜய் சேதுபதி

1 mins read
a8fe34c9-9145-40a4-8481-f2ad19c2d8f1
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 50வது படமான ‘மகாராஜா’வில் நடிக்க வாங்கிய சம்பள விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.

கோலிவுட்டில் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து அதிக வசூல் ஈட்டிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை மகாராஜா விரைவில் முறியடிக்க உள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியான இப்படம், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஆனால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு விஜய் சேதுபதி ரூ.20 கோடிதான் பெற்றிருக்கிறார். இவர் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடித்ததற்கு ரூ.25 கோடி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அண்மையில் பேசியபோது, “நான் நடித்த பல படங்களில் முன்பணம் தவிர தயாரிப்பாளர்கள் கொடுத்த காசோலைகள் திரும்ப வந்துவிட்டன. பல படங்களில் சம்பளம் இல்லாமலேயே நடித்திருக்கிறேன்,” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திநடிகர்