‘விஜய் விலகுவதால் திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை’

1 mins read
6ed4df23-b7de-498a-b778-8055858d5147
விஜய், கஸ்தூரி. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் விரைவில் சினிமாவை விட்டு விலகுவது குறித்து பிரபல நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருப்பது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாயைத் தாண்டி சம்பளம் வாங்கும் ஒரே நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் விஜய் கலை உலகை விட்டு விலகுவது குறித்து பிரபல நடிகை கஸ்தூரி அவர்களிடம் கேட்ட பொழுது, “விஜய் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் இந்தக் கலை உலகில் பயணித்து வருகிறார். ஆனால் இந்தச் சினிமா உலகம் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

“ஆகவே அவர் திரைத்துறையை விட்டு விலகுவது கலைத்துறைக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்று கூறி ஒரு பெரிய பிரளயத்தையே கிளப்பியிருக்கிறார்.

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பது, சாதாரண ஒரு விஷயமாக இருந்தாலும் கோலிவுட் உலகின் வியாபாரம் பெரிய அளவில் வீழ்ச்சியடையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தச் சூழலில் கஸ்தூரியின் இந்த சர்ச்சை கருத்துக்கு, எதிர் விளைவு எப்படி இருக்குமோ என்று கோலிவுட் கவலையில் ஆழ்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திநடிகர்