தாய்லாந்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அஞ்சலி

தாய்லாந்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அஞ்சலி

1 mins read
6a849e79-f568-4930-89e9-d01b6841d7e4
பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அஞ்சலி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை அஞ்சலி தனது பிறந்தநாளை தாய்லாந்து நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவான கோ சமுய் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்று அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணம் முடிந்தது. ஈடு இல்லாத அன்பிற்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி. புதிய சாகசங்கள், அதிகமான மகிழ்ச்சி நிறைந்த ஆண்டைத் தொடங்கி இருக்கிறேன். அதை மறக்க முடியாததாக மாற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் அந்தப் படங்கள் வெளியாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்